DRAG

அருள்மிகு பாட்டனார், அருள்மிகு கருப்பனார் திருக்கோவில் அத்தனூர்பட்டி, வாழப்பாடி வட்டம். சேலம் மாவட்டம்.

முப்பூஜை பெருவிழா பற்றி

அருள்மிகு பாட்டனார், அருள்மிகு கருப்பனார் திருக்கோவில் அத்தனூர்பட்டி, வாழப்பாடி வட்டம். சேலம் மாவட்டம்.

தொடர்புக்கு

அருள்மிகு பாட்டனார், அருள்மிகு கருப்பனார் திருக்கோவில் அத்தனூர்பட்டி, வாழப்பாடி வட்டம். சேலம் மாவட்டம்.

எங்களைப் பற்றி

1986

முப்பூஜை பெருவிழா தொடக்கம்

9

முப்பூஜை பெருவிழா நடைபெற்றது

5

ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பெருவிழா

கோவில்பற்றி

கோவில் பற்றி

   அருள்மிகு பாட்டனார் அருள்மிகு கருப்பனார்(அத்தனூர் பட்டி, வாழப்பாடி வட்டம்) திருக்கோவில் தொன்மை மிகு செந்தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டத்தில் அத்தனூர் பட்டிக் கிராமம் உள்ளது. பேரொழில் கொஞ்சும் குறிஞ்சி, முல்லை, மருத நிலம் சூழ்ந்து தோற்றம் அளிக்கிறது. இக்கிராமத்தில், அத்தனூர் அம்மனை காவல் தெய்வமாகக் கொண்ட பழைய ஊரின் வடகிழக்கு மூலையில் பூத்துக்குலுங்கும் அழகிய தோப்பின் நடுவே அருள்மிகு பாட்டனார் அருள்மிகு கருப்பனார் திருக்கோவில் அமைந்துள்ளது.

   பழம் பெருமையுடன் இவ்வூரில் வாழும் வன்னிய குலசத்திரிய கிச்சி, சந்தன, மாகுட்டி, பெரமன், புட்டன் என ஆறு வகையறாக்களுக்கு இக்கோவில் சொந்தமானது. அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு தெற்கோ பூஜைக்கூடை வீடும், அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவிலும் உள்ளது. அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா, அருள்மிகு பாட்டனார் அருள்மிகு கருப்பனார் திருக்கோவிலில் முக்கிய நாள்களில் வழிபாடுகளும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடிமாதத்தில் முப்பூஜைப் பெருவிழாவும் நடைபெற்று வருகின்றன.

   அருள்மிகு பாட்டனார் அருள்மிகு கருப்பனார் சாமிகளுக்கு இப்பூஜை போட்டது என்பதற்கான சரியான தகவல் தெரியவில்லை. ஆனாலும் ஒரு சிலர் முப்பூஜை போட்டு 42 ஆண்டுகள் இருக்கலாம் என யூகித்துச் சொன்னார்கள். 1986 ஆம் ஆண்டு பங்காளிகள் ஒன்று கூடி, முப்பூஜை இனி செய்யலாம் என மகிழ்வோடு முடிவு எடுத்தனர். அதுமுதல் தற்போது 2025ல், விசுவாவசு ஆடிமாதத்தில் நடைபெறும் முப்பூஜைப் பெருவிழா 9வது முறையாகும்.

WhatsApp Image 2025 07 11 at 11.40.33_b1e6978b e1752215727843
IMG_20250517_135920 scaled

கோவிலுக்கு போக்குவரத்து வசதி உள்ளது:

பஸ் ரூட்: வாழப்பாடி to பேளூர் சாலையில் அத்தனூர்பட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கவும். பஸ் நெ. 15, V2, V7, V6, V5, ATC, MRR, சரவணா.

சேர் ஆட்டோ வசதிகள் உள்ளது

God Image
* அருள்மிகு பாட்டனார், அருள்மிகு கருப்பனார் * Arulmigu Pattanar, Arulmigu Karuppanar
img

அருள்மிகு பாட்டனார், அருள்மிகு கருப்பனார் திருக்கோவில்

முப்பூஜை பெருவிழா வரும் 24/ 7 /2025 முதல் 7/ 8 /2025 வரை நடைபெற உள்ளது. இதைப் பற்றிய தகவல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைவரும் வருக!

இறைவன் அருள் பெறுக!